Friday, September 17, 2010

சிறுகதைகள்...

நான் எதார்த்தமாக வாழ்க்கையில் நடந்து செல்லும்பொழுது தவறுதலாக என் பாதம் சில சமயம் கல்லில் பட்டு தெறித்திருக்கிறது ....அந்த உண்மை சம்பவங்களை கொண்டு இனிமேல் சில சிறு கதைகளை வீசி விட்டு செல்ல போகிறேன்....

காதலி "இரவு..."

இரவுகள் விட்டுபிரிந்து
தருணங்கள் பகல்களாய்
என்னை தகிக்கிறது...

இரவின் கண்ணியம் காக்க
நிலவெனும் காவலன்
காவல் இருந்து இருந்து ....
களைத்துபோய்,..
தேய்ந்து தேய்ந்து
ஒரு நாள் காணாமல்
போகிறான்...

அன்றுதான் நானும் இரவும்
கலப்பதற்கு சௌகரியம் ....
என்ன தாயின் கருவறை கூட
இவ்வளவு இருட்டாக
இருந்ததில்லை...

என் வெளியே மட்டுமல்ல...
உள்ளேயும் இவ்விரவு
நீக்கமற நிறைந்துள்ளது....

காலடி தடம்

கனவில் கூட காட்சிகள்
தொலைவதில்லை...
ஆனால்
காட்சிகள் மாறும்பொழுது
விழிப்புணர்வு கொள்கிறேன்....

வெள்ளையான உருவம்
நடந்து போன
பாதச்சுவடு என் கனவு
காட்சிகளில்...

எங்கிருந்தோ வந்து
தடம் பதித்து சென்றாள்...
இப்பொழுது
கனவுகள் வருகிறதோ இல்லியோ..
காலடி தடம் மட்டும்
காட்சிகளாய்...

கரைந்து விடுங்கள்

கற்றுக்கொண்ட வார்த்தைகள்
கவனிப்பின்றி
தாறுமாறாய்
தாள்களில் பொறிக்கிறேன்.....

எல்லோரும் திறமை
என்றனர்...
என்னால் மட்டும்
ஏற்க முடியவில்லை...

வார்த்தைகள் புதுமை இல்லை...
நினைவுகளில் புதுமை இல்லை...
காட்சிகளில் புதுமை இல்லை....
கருத்துக்களில் புதுமை இல்லை...

வரிகளை வடிவமைத்
திருக்கிறேன்

அர்த்தம் புரிந்தால்
சிந்தியுங்கள்...
புரியாவிட்டால்
கரைந்து விடுங்கள்...

புரியாத வரிகள்...

புரியாத வரிகளில்
கிறுக்கல்களாய்
கவிதைகள்....

விளக்கம் கேட்டனர்
பலர்...
விடையாய் அமைந்தது
என் மௌனம் மட்டுமே...

தோன்றும் வார்த்தைகளை
எழுதிபார்கிறேன்

கோர்வை இருக்கிறது
அர்த்தம் அறிய முடியவில்லை...

அறிய முற்படுகிறேன்
அறிவதற்குள் அப்பால்
சென்று விடுகிறது.....