Sunday, October 18, 2009

விடை கொடுக்காதீர்கள் !!!!


சலனங்களை வார்த்தைகளால் கொட்டியபடி மிதந்து சென்று கொண்டிருந்தேன். என் எதிரில் பாலைவனமாய் விரிந்த மண் சோலையில் சிறு சிறு துகள்களும் என்னை பார்த்து கை கொட்டி சிரித்து கொண்டிருந்தது. என் கண்களில் நீர் கூட நெருப்பு சாம்பலாய் சிதறி கொண்டிருந்தது. நிமிர்ந்து வானத்தை கூட பார்க்காமல் சிவப்பு வறட்டு மேகங்களுக்கு இடையில் இலக்கிலாமல் பறந்தது கொண்டிருந்தது அந்த கருப்பு பறவை. அதன் இறகுகள் விட்டு சென்ற திசைகள் இலக்காக கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது என் உடலின் இருந்த கால்கள்..என் மனதில் தோன்றி கொண்டிருந்த வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாய் உதறி கொண்டிருந்தது...என்ன நாவும் முதலில் முயற்சி செய்து பிறகு தோற்று கொண்டிருந்தது... கையில் விரல்களோ வறண்ட காற்றில் ஈரத்தை தேடி காற்றை குத்தி கொண்டிருந்தது.....வருடங்களோ நிமிடங்களாக கரைந்திருந்து கொண்டிருக்கிறது....தரையில் இருந்த என்ன கால்களோ மெல்லமாய் பிடி நழுவி காற்றினில் எத்தனிக்க முயன்றது ... இப்பொழுது முழுவதுமாக என் நாவு அடங்கியது,,,
மனதும் அடங்கியது....சிவப்பு வானம் வெள்ளை ஆகியது... என் உடல் கரைந்து போனது ....என் செல்கள் நட்சத்திரமாகியது...செல்களை தழுவிய இருள்கள் வெளிச்சமாய் எனக்குள்...ம்ம்ம்ம்ம்....தெரியாத பாதை கூட இனிமையான பயணத்தை தோற்றுவிக்கிறது சில சமயங்களில்...பூமியை பார்ப்பதற்கு லட்சம் கண்கள் என்னுள்.....எனக்கு விடை கொடுக்காதீர்கள் ...நான் உங்களை பார்த்துகொண்டுதான் இருக்கிறேன்...

No comments:

Post a Comment